
ஓசூர் மாநகர உள்வட்ட சாலையுடன் இணையும்
வ. உ.சி. நகர் அருகில் முனீஸ்வர் நகர் சந்திப்பு பகுதிக்கு “தந்தை பெரியார் சதுக்கம்” என பெயரிட்ட தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும்
தந்தை பெரியார் அவர்களின் பெயர் வைக்கக்கூடாது என
மதவெறி தூண்டி, அரசியல் ஆதாயத்திற்காக தவறான பிரச்சாரம் செய்யும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராம்நகர், அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
விசிக ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் இராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்
ஜாகிர் ஆலம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜுபைர்அஹமது,
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முகமது அசர், ஓசூர் மாநகர செயலாளர் ஜபி, ஓசூர் மாநகர நிர்வாக குழு உறுப்பினர் காலித்,
தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஜீப் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.