வேலூர் மாவட்டம் :
வேலூர் மாநகருக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கும் – மண்டி தெருவுக்கும் இடைப்பட்ட தெருவில் அரசுக்கு சொந்தமான இரண்டு டாஸ்மார்க் கடைகள் செயல்பட்டு வருகிறது. அரசு விதிகளின்படி மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் அரசு டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
இதையும் படியுங்கள் : Vaathi Movie Review : வாத்தி திரைப்பட ஃபர்ஸ்ட் கிளாஸ் ரிவ்யூ இதோ….
இதற்குப் பிறகு இந்த இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள உணவு பண்டங்கள் விற்கும் (ஸ்னாக்ஸ்) கடையில் டாஸ்மார்க் மூடப்படும் இரவு 10 மணி முதல் தொடர்ந்து இரவு முழுவதும் என மதியம் 12 மணிக்கு டாஸ்மார்க் கடை திறக்கும் வரை கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அரசு கடை செயல்படும் நேரத்தை காட்டிலும் கள்ளத்தனமாக இயங்கி வரும் கடை அதிக நேரம் செயல்படுவதாக கூறப்படுகிறது.
வண்டி தெரு மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளதால் இரவு நேரத்தில் விற்கப்படும் கள்ளத்தனமான மது விற்பனையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.இதனால் கள்ளத்தனமாக செயல்படும் கடையை மூடி அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்படுகிறது.