சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பால் மருத்துவமனை சந்திப்பில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் தொடர் வாகன விபத்துக்கள் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்துஅதை தடுக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி பி. விஜயகுமாரி IPS, அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உதவியோடு ஒளிமிளிரும் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு சாலை சீரமைப்பு பணிகள் காவல்துறை நடவடிக்கை மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் கடந்த 13 மாதங்களாக சிறு சாலை விபத்து கூட நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பொதுமக்கள் இந்த இடத்தினை கடந்து செல்லும்போது இரவு நேரங்களில் கவனமாகவும் பத்திரமாகவும் சாலையை கடந்து செல்லுமாறு சேலம் மாநகர காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.