தமிழ்நாடு காவல்துறை, சிறை துறை மற்றும் தீபணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களின் வாரிசுதாரர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை இயக்குனர் முனைவர் கருணாசங்கர் உத்தரவின்பேரில், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.
கண்ணன் அறிவுறுத்தலின்படி, வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் முத்துசாமி வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தலைமையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு வடக்கு மண்டவத்தில் உள்ள விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய பத்து மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை, சிறை துறை, தீபணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் வாரிசுதாரர்களுக்கு 20.03.2023 மற்றும் 21.03.2023 ஆகிய இரண்டு தேதிகள் வேலைவாய்ப்பு முகாம் வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த 230 நபர்கள். சிறைத்துறை குடும்பத்தை சேர்ந்த 31 நபர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் துறை குடும்பத்தை சேர்ந்த 18 நபர்கள், ஆக மொத்தம் 279 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் காவல்துறை குடும்பத்தை சேர்ந்த 102 நபர்கள், சிறைத்துறை குடும்பத்தை சேர்ந்த 17 நபர்கள், தீபணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் துறை குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள். ஆக மொத்தம் 127 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.
காவல்துறை குடும்பத்தை சேர்ந்த 106 நபர்கள், சிறைத்துறை குடும்பத்தை சேர்ந்த 14 நபர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை குடும்பத்தைச் சேர்ந்த 9 நபர்கள் என மொத்தம் 129 நபர்கள் அடுத்த கட்ட தேர்வு ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.