சிறுமிகளை ஆபாசமாக படம் பிடித்து வெளிநாட்டில் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து 3 நாட்கள் விசாரணை நடத்தி தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விகதர் ஜேம்ஸ் ராஜா (வயது 32). பிரதமரை பற்றி அவதூறான கருத்துகளை பிரதமர் அலுவலகங்களுக்கு மெயில் அனுப்பியதாக டெல்லியில் இருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை 7 மணிக்கு அவரை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக இன்டர்போல் காவல் துறை சிபிஐயிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் தான் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தது பின்னர் தெரிய வந்தது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 3 நாட்கள் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தினர்.
ஒரே சித்திரவதை.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழியின் அதிரடி முடிவு
விசாரணையில், விக்டர் ஜேம்ஸ் ராஜா என்ற ஆராய்ச்சி மாணவர், சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து வெளிநாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் விக்டர் ஜேம்ஸ் ராஜா வீடியோவுக்கு ஏராளமான பார்வையாளர்கள் இருப்பது தெரியவந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட இளைஞரை சிபிஐ அதிகாரிகள் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்டர்போல் புகாரின் அடிப்படையில் நாடு முழுவதும் 21 இடங்களில் இந்த விசாரணையும் கைதும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments 1