ஓமலூரில்: மாற்றுத்திறனாளிகளுக்கானஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலதிட்டங்கள் மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில்,மாற்றுதிறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பிரத்யோக தேசிய அடையாள அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் வேலாசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
இந்த முகாமில் இலவச அறுவை சிகிச்சை, கண் திறன், செவித்திறன் கருவிகள், மூக்கு கண்ணாடி, நடைபயிற்சிக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.