பெண்மையை போற்றும் விதமாக ஆண்டு தோறும் சேலம் சோனா கல்வி குழுமத்தின் சார்பில் கொண்டாடப்படும் மகளிர் தின விழா கல்லூரியின் வளாகத்தில் நடைப்பெற்றது.
கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் தலைவர் திரு.வள்ளியப்பா, திருமதி சீதா வள்ளியப்பா கல்லூரியின் துணைத்தலைவர் திரு.சொக்குவள்ளியப்பா ஆகியோர் கானொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
விழாவில் சென்னை வீ-கேர் கிளினிக் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான டாக்டர்.கரோலின் பிரபா ரெட்டி மற்றும் பெங்களூரு அவுட்ஷைன் அவுட்பிளே நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான அபிராமி துரைசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
அவர்கள் பேசும்போது, சவால்களை சந்திக்கும் போது தான் பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும், இதற்கு தன்னம்பிக்கையும், தைரியமும் மிக அவசியம் என்றும் மேலும் பெண்கள் தங்களது குடும்ப தொழிலை முன்னேற்றுவதிலும் மற்றும் சுயதொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய சோனா குழுமத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா, அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை பெண்களும் படிக்கலாம் என்ற வகையில் முதன் முதலாக இருபாலர் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும், மாணவிகளின் திறமைகளை அறிந்து அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருவதற்கு சோனா கல்வி குழுமங்கள் உதவிகரமாக இருப்பதாகவும் மேலும் அனைத்து மகளிருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜீ.எம்.காதர்நவாஷ், எஸ்.மதன்குமார், இ.ஜெ.கவிதா மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சோனா கல்வி குழுமத்தின் பேராசிரியைகள் குழு சிறப்பாக செய்திருந்தனர்.