மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன தலைவர் கமலஹாசன் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி சார்பாக உலகப் பெண்கள் தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள ஹோட்டல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யத்தின் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சமேஸ்வரி குருவாயூரப்பன் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் மூகாம்பிகா ரத்தினம், மதுரை மண்டல மகளிர் அணி அமைப்பாளர் பத்மா ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மு.சீனிவாசபாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்ச்சியில் ஆனந்தி ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சாதனைப் பெண்களுக்கும், சரித்திரம் படைத்த பெண்களுக்குமான விருதில் சிறந்த செவிலியர், சிறந்த பெண் காவல்துறை, சிறந்த விளையாட்டு வீராங்கனை, சிறந்த மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், சிறந்த நாதஸ்வர கவிஞர், சிறந்த சமூக ஆர்வலர், சிறந்த அழகு கலை நிபுணர், சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட், சிறந்த மெஹந்தி ஆர்டிஸ்ட் ஆகியோர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவர் தங்கவேல், விஜய் டிவி புகழ் பிக்பாஸ் தாமரை ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இதில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மக்கள் நீதி மய்யத்தின் நகரச் செயலாளர் கமலாதேவி நன்றி கூறினார்.