தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி மற்றும் சிறந்த சமூகசேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் F.A.C கலையரங்கத்தில் நடைபெற்றது இதில் கவுன்சில் சேர்மன் DR.A.ரபீக் அவர்கள் தலைமையில் தேசிய பொது செயலாளர் DR.S.விஜயலட்சுமி அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார் தேசிய தலைவர் குபேரபாண்டியன் தேசிய துணை தலைவர் ஹேம்நாத் முன்னிலை வகித்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரத்ததானம் மற்றும் மக்கள் சேவை செய்து வரும் அமைப்புகளுக்கு சிறந்த சமூகசேவகர் விருது வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதிசுற்றுச்சூழல் பாசறை
தொடர்ச்சியாக நீர்நிலைகள் தூய்மை செய்யும் பணிகளை முன்னெடுத்தமைக்காக திரு. சீலன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.

.மேலும் இந்தியளவில் தற்காப்பு கலைகளில் சேம்பியன் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில் முனைவோர்கள் சந்திரசேகர்.ராஜேந்திரன்.புவனேஷ்வரி.ஜெயஸ்ரீ.எஸ்தர். சங்கர்ஐயா. ரேஸ்மி மற்றும் கவுன்சில் மாநில.மாவட்ட.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி முடிவில் தேசிய செயலாளர் சுவாமிநாதன் நன்றியுரை ஆற்றினார்