திருவள்ளூர் பிப்.27
மீஞ்சூர் அருகே நள்ளிரவில் வடமாநிலத்தார் போதையில் ரகலையில் ஈடுபடுவதாக குடியிருப்பு வாசிகள் வெளியேற்ற கோரி அரிசி ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அங்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர், இவர்களில் சிலர் நள்ளிரவில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தொந்தரவு கொடுத்தாகவும் வீட்டின் உரிமையாளர்கள் உள்ளே தூங்கிக் தூங்கிக் கொண்டு இருக்கும்போது உள்புறமாக தாழிட்ட கதவை இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி திறந்து கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வதாக கூறப்படுகிறது.
மேலும் கஞ்சா, மது போதையில் நள்ளிரவில் இவர்கள் ரகலையில் ஈடுபடுவதோடு தனியாக வசிக்கும் பெண்களை கேலி கிண்டல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் ஒருவருக்கு சொந்தமாக அமைந்துள்ள இந்த அரிசி ஆலையை முற்றுகையிட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வட மாநிலத்தவரை வெளியேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் அறிந்து நிறுவனத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அனுமதி இன்றி வட மாநிலத் தவறை தங்க வைத்த அரிசி ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.