வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் சேகர் தலைமையில் நடைபெற்றது இந்த போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் இளங்கோ துவங்கி வைத்தார் இதில் ஜனார்த்தனன்,ஷாநவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.
தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் தற்;போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனே வழங்க வேண்டும் அரசு பணிகளில் ஒப்பந்த முறையை கைவிட்டு காலமுறை ஊதிய திட்டத்தி;ல் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளாட்சி அமைப்பு அரசு துறைகளில் தனியார் முகமை மூலம் தனியார் நியமனத்தை தடை செய்யவும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தவும் 3500 அரசு தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைபள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது இதில் திரளான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்