சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம், தீவட்டி பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி கடந்த ஆறாம் தேதி விநாயகர் கோவில் இருந்து பால்குட ஊர்வலம் எடுத்துவரப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று வழுக்கு மரம் ஏறுதல் நடைபெற்றது.
அடுத்து மாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் சுமார் 100 கணக்கான பக்தர்கள்
கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது.
கோவிலில் இருந்து இழுக்கப்பட்ட தேர் தீவட்டிப்பட்டி நடு ஊரில் தேர் நிறுத்தப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை 8 மணிக்கு நடுவில் இருந்து தேர் புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோவிலை வந்தடைவோம்.
நாளை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரியம்மன் பச்சையம்மன் கோவிலுக்கு சென்று சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களுடைய நேர்த்திக்கடனே செலுத்தினார்கள்.