தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் நிர்வாகிகளுக்கான நேர்காணல் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடந்தது.டிரைவர்களுக்கு நல வாரியம் மூலம் உதவி கதிர் ஆனந்த் எம்.பி. தகவல்
தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் கதிர் ஆனந்த் எம்.பி. செயலாளர் தர்மபுரி செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினர்.இதில் வேலூர். திருப்பத்தூர். ராணிப்பேட்டை திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தி.மு.க.அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தலைவர் கதிர் ஆனந்த் எம்.பி. கூறியதாவது
அமைப்புசாரா ஓட்டுநர்கள் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கும் அரசு உதவி கிடைத்து பயன்பெறும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியை உருவாக்கியுள்ளார்.
இதில் அரசு பணிகளில் உள்ள டிரைவர்கள் உறுப்பினராக முடியாது. மற்றபடி ஆட்டோ, வேன், ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி, கனரக வாகனங்கள். பள்ளி,கல்லூரி வாகன டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், டிராக்டர் டிரைவர்கள் பொக்லைன் டிரைவர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடக்கூடிய வாகனங்களின் டிரைவர்கள் உறுப்பினராக சேரலாம்.அமைப்புசாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகளுக்கான முதல் நேர்காணல் வ தொடங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து சென்னை திருச்சி மதுரை, கோவை பகுதிகளில் தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடைபெற உள்ளது.
நல வாரியம் மூலம்
உதவி நேர்காணல் முடிந்த பிறகு நிர்வாகிகளின் திறமைக்கேற்ப அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். மேலும் திமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணியில் சேரும் உறுப்பினர்கள் நலவரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். அதன் அவர்களுக்கு மூலம் விபத்து நேர்ந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களது குழந்தைகள் பள்ளி படிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடியும்.தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் மீதும் அவர் நடத்துகின்ற திராவிட மாடல் ஆட்சி மீதும் மக்களுக்கு அற்புதமான வரவேற்பு ஏற்பட்டுள்ளது.அவர் இவ்வாறு கூறினார்.