கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள்தண்டனையை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை,
கடந்த 16.04.2021-ந் தேதி தியாகதுருகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வீ.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சுப்பிரமணி என்பவர் தனது வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்ததாகவும் சிகிச்சை பலனின்றி 17.04.2021-ந் தேதி இறந்துவிட்டதக முருகேசனின் தங்கை இந்திரா என்பவர் தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு வந்து தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கொடுத்து புகார் மீது உனடியாக வழக்கு பதிவு செய்யபட்டது.
இவ்வழக்கில் காவல்துறையினர் தீவிரவிசாரணை செய்ததில் இறந்து போன சுப்பரமணியின் மனைவி செல்வி (37) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெயமுருகன் (45) என்பவருக்கும் 2 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக மேற்படி சுப்பிரமணிக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிரி செல்வியும் அவர் கள்ளத்தொடர்பு வைத்துள்ள எதிரி ஜெயமுருகனும் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய சதித்திட்டம் போட்டுள்ளனர்.
Forgery issue; கள்ளக்காதல் பிரச்சினை; கணவன் கழுத்தை அறுத்து கொன்ற காதல் மனைவி கைது
அதன்படி 16.04.2021 எதிரி செல்வி என்பவர் அதிகாலை 1.30 மணிக்கு ஜெயமுருகன் வாங்கி கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை சுப்பிரமணி வைத்திருந்த மதுவுடன் கொலை செய்யும் நோக்கில் கலந்து வைத்துள்ளார், அது விஷம் கலக்கப்பட்ட மதுவென தெரியாமல் அருந்தியதால் சுப்பரமணி இறந்துள்ளார் என்று தெரியவரவே இவ்வழக்கினை சந்தேக மரணத்தில் இருந்து கொலை வழக்காக சட்டப்பிரிவை மாற்றும் செய்து எதிரிகள் இருவரும் கைதுசெய்து நீதிமன்றகாவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை முடித்து குற்றாவளிகள் இருவர் மீதும் இறுதியறிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது
இந்நிலையில் 24.03.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திருமதி.கீதா அவர்கள் தனது தீர்ப்பில் காவல்துறை அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் செல்வி மற்றும் ஜெயமுருகன் ஆகிய இருவரும் குற்றவாளி என்று உறுதி செய்து இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 31,500/- ரூபாய் அபராதமும் விதித்து தண்டனையாக தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோர்களுக்கு மோகன்ராஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.