ராஜஸ்தான் மாநிலம் அதிகபட்சமாக 10.39 சதவீத ஊதிய உயர்வு பெற்றுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005ன் கீழ் 2023-24ஆம் நிதியாண்டுக்கான புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அதிகபட்சமாக 10.39 சதவீத ஊதிய உயர்வு பெற்றுள்ளது. அதேசமயம் கோவா மாநிலத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் 2.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005 இன் படி, பிரிவு 6 இன் துணைப் பிரிவு (1) இன் கீழ், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
NREGS ஊதிய விகிதத்தின்படி ஹரியானா மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.357 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு ரூ.221 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய ஊதிய விகிதம் 10.39 சதவீதம் அதிகரித்து, ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.255 ஆக உள்ளது. முன்பு 2022-23ல் ரூ.231 ஆக இருந்தது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 8.57 சதவீத ஊதிய உயர்வு உள்ளது.
புதிய NREGS ஊதிய விகிதங்களில், கோவாவிற்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு 2.22 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23ல் ஒரு நாள் ஊதியம் ரூ. 315 2023-24ல் ரூ. 322 ஆக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து கர்நாடகாவுக்கு 2.27 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாள் கூலி ரூ. 309 முதல் ரூ. 316 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு எவ்வளவு?
7 மாநிலங்கள் தற்போதைய (2022-23) விகிதங்களை விட 2023-24க்கான ஊதிய விகிதங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவான உயர்வைக் கொண்டுள்ளன. மேகாலயா (3.4 சதவீதம்), மணிப்பூர் (3.59 சதவீதம்), அருணாச்சல பிரதேசம் (3.7 சதவீதம்), நாகாலாந்து (3.7 சதவீதம்), அஸ்ஸாம் (3.93 சதவீதம்), தமிழ்நாடு (4.63 சதவீதம்), புதுச்சேரி (4.63 சதவீதம்) ஊதிய உயர்வு கண்டன.
Please Fallow : Google News
Please Fallow : Telegram