இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் பரபரப்பாக தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நடிகர் வடிவேலு டப்பிங் பேசும் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். ரெட் ஜெயின் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பகத் பாஸிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix OTD நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதிக்குப் பிறகு OTD வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.