திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கள்ளிமந்தயம் பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 12வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினராகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்களை பள்ளியின் தாளாளர் கே.ஜெயலட்சுமி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தமிழகத்தின் சீரிய திட்டங்களான சிறுவர் சிற்றுண்டி திட்டம் , கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மூவாலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித்திட்டம் ரூ 1000 வழங்கும் திட்டம் திறன் வளர்ப்பை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம் என அரசின் செயல் திட்டங்களை பற்றியும் பள்ளியில் பயிலும் மாணவ செல்வங்களுக்கு மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி ஜே. அப்துல் கலாம் அவர்கள் சொன்னது போல கனவுகளை காணுங்கள் அதை செயல்படுத்த முயற்சியுங்கள் வளர்ச்சி அடையுங்கள் இன்றைய மாணவ சமுதாயமே…..நாளை நல்ல தலைவர்களின் உருவாக்கம் என, அறிவுரை கூறி பரிசுகள் வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சன்டிவி புகழ் மதுரை. ராமகிருஷ்ணன், சுபைத் அஹமது, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் .தங்கராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் பி.சி தங்கம், கீரனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.மு. நாட்டுத்துரை ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் மெட்ரிகுலேஷன் பள்ளியின் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
விளையாட்டு போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்க வைத்து அதிக பரிசுகள் வெல்ல வைத்த பரிசுகள் வைத்த விளையாட்டு ஆசிரியருக்கு பெற்றோர்கள் சார்பில் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.பின்பு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவில் பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் கே.முத்துவேல் நன்றி தெரிவித்தார்.