தூத்துக்குடியில் மார்ச் 16, 17ம் தேதிகளில் பொதுமக்களை சந்தித்து சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறியவுள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 16.03.2023 அன்று காலை 10 மணிக்கும், மீளவிட்டானில் மாலை 5 மணிக்கும் மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவுள்ளார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.03.2023 அன்று காலை 10 மணிக்கு மாவட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அன்று மாலை 5 மணிக்கு மாநகராட்சிக்குட்பட்ட 23வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவுள்ளார்கள்.
மாநகராட்சிக்குட்பட்ட 28வது வார்டு பகுதிகளில் 18.03.2023 அன்று காலை 9.30 மணிக்கு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறியவுள்ளார்கள். மாலை 3.30 மணிக்கு முத்தையாபுரம் மரியம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள மகளிர் தினவிழா மற்றும் மாலை 5 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறவுள்ள வியாபாரிகள் சங்க மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளில் அமைச்சர் பெ.கீதாஜீவன் பங்கேற்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.