காட்பாடியில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படத்தை செவித்திறன் குறைபாடு உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச காட்சியை காண்பித்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது இதனை அடுத்து வேலூர் மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது இதனை அடுத்து காட்பாடி விருகம்பட்டு பகுதியில் உள்ள விஷ்ணு திரையரங்கில் வேலூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவர் டீட்டா சரவணன் தலைமையில் ஹோலி கிராஸ் செவிதிறன் குறைபாடுள்ளோர் மாற்றுத்திறனாளி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் கலந்துகொண்டு இலவச காட்சி காண டிக்கெட்டினை வழங்கினார் மேலும் திரைப்படத்தை காண வந்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினர் .
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட செயலாளர் என்.எஸ்.கே.பத்ரி மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்டத் துணைத் தலைவர் ராஜ், மாவட்ட பொதுக்குழு மீசை மனோ, சிறப்பு மற்றும் வேலூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.