மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தாரமங்கலத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தாரமங்கலம் அர்ஜுன் கராத்தே மாஸ்டரின் மாணவர்கள் 30 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் திருக்குமரன் 2 ஆம் பரிசும் விக்னேஷ் 3 ஆம் பரிசும் பெண்கள் பிரிவில் சுமித்ரா 3 ஆம் பரிசும் வென்றுள்ளனர் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் 11 பேர் முதல் பரிசும் 8 பேர் இரண்டாம் பரிசும் 5 பேர் மூன்றாம் பரிசும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பயிற்சியாளர் அர்ஜுன் கராத்தே மாஸ்டர் இராமிரெட்டிபட்டி தலைமை பயிற்சியாளர் அருள்மொழி கோவை ஆகியோர் கலந்து கொண்டனர்.