வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடியில் நடந்தது கூட்டத்திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தன்ன், ராமன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கோரிக்கைகள்
புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6லட்சம் பணி இடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.
உள்பட 15அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.