திட்ட மேலாண்மை பணிகளுக்காக ரூபாய் 7.89கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக பலமுறை முயற்சி செய்து நிதியை பெற்றுத்தந்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்
தமிழ்நாட்டின் முக்கியமான இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் சந்திப்பும் ஒன்று, வேலூர் மாநகரம், அதனை சுற்றியுள்ள கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு மற்றும் இராணிபேட்டையில் உள்ள மக்களும், வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, சி.எம்.சி, விஐடி மற்றும் பொற்கோவில் போன்ற முக்கிய இடங்கள் காட்பாடியை சுற்றியே அமைந்துள்ளதால் வெளிமாநிலங்களிருந்து வரும் மக்கள் பயன்பெறும் வகையில் காட்பாடி இரயில்வே சந்திப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும்.
மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டி ஒன்றிய அரசிடம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் து.மு.கதிர் ஆனந்த் பலமுறை பாராளுமன்றத்திலும், மத்திய இரயில்வே அமைச்சரை நேரிலும் மற்றும் கடிதம் வாயிலாகவும் வலியுறுத்தியதின் அவரின் சீரிய முயற்சியால் 26 மே 2022 அன்று மத்திய இரயில்வே அமைச்சகம் ரூபாய் 329கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் 22 பிப்ரவரி 2023 அன்று சென்னை கோட்டத்திற்கான தென்னக இரயில்வே மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கிணங்க
உடனடியாக திட்ட மேலாண்மை பணிகளுக்காக ரூபாய் 7.89கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்திற்காக பலமுறை முயற்சி செய்து நிதியை பெற்றுத்தந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.