திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் தமிழக முதல்வரின் ஆணையின்படி சுகாதாரமான தமிழ்நாடு சுத்தமான தமிழ்நாடு அமைவதற்கு குப்பைகள் இல்லா நகரமாக அமைவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் மக்கும் குப்பை மக்காத குப்பையாக தங்கள் வீடுகளில் தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு பேரணி ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நகர் மன்ற தலைவர் க. திருமலைசாமி முன்னிலையில் நகர் மன்ற துணைத் தலைவர் ப. வெள்ளைச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் நகர்மன்ற ஆணையாளர் சக்திவேல் (பொ) நகர் மன்ற உறுப்பினர்கள் அருள்மணி நாட்ராயன். செல்வராஜ் , சாந்தி ஆறுமுகம் , ஜெயமணி சரவணன், பழனிச்சாமி , உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற தூய்மை பணியாளர்கள், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய அமைப்பாளர் ஆர்.பாஸ்கர சேதுபதி மற்றும் 100 -க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேசன் தலைவர் எஸ்.எஸ். சுரேஷ் குமார், செயலாளர் ஹெரால்டு ஜாக்ஸன், செயற்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சரவணசக்தி, மற்றும் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஒட்டன்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மா. சக்திவேல், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கிறித்துவ நர்சிங் கல்லூரி முதல்வர் விக்டோரியா செல்வகுமாரி, மாணவ , மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஒட்டன்சத்திரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் நன்றி தெரிவித்தார்.