நிலநடுக்கம் ஏற்படும் சமயங்களில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக,
தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக போலி ஒத்திகை நிகழ்ச்சி.
நிலநடுக்கம் ஏற்படும் சமயங்களில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது தொடர்பாக, தேசிய பேரிடர் மீட்பு படை சார்பாக போலி ஒத்திகை நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று, நடைபெற்றது. அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் துணைக்கமாண்டர் சங்கர பாண்டியன் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய nபேரிடர் மீட்பு படையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களில் தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை எவ்வாறு இடிபாடுகளை அகற்றி மீட்பது, கட்டிடங்களின் மேல் மாடியில் சிக்கியிருப்பவர்களை கயிறு மூலம் வெளிக்கொண்டு வருதல், மீட்கப்பட்ட மக்களை உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்வது, போன்ற செயல்பாடுகளை தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் உள்ள அதிநவீன கருவிகளை பயன்படுத்தி மக்களை மீட்டெடுத்தல், தொடர்பு சாதனங்கள் இல்லாத சமயத்திலும் தங்களிடம் உள்ள அதிநவீன சாட்டிலைட் உதவியுடன் மக்களை மீட்பது. உள்ளிட்ட போலி ஒத்திகை நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு செய்து காட்டி
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்தப் போலி ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து தீயணைப்பு துறை, மருத்துவத் துறையினர் வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைக்கமாண்டர் சங்கர பாண்டியன்,
இயற்கையை ஏற்பாடுகள் எங்கு ஏற்பட்டாலும் அந்த பகுதிகளுக்கு தேசியபேரிடர் மீட்பு குழு விரைவாக சென்று,
அங்கு பொதுமக்களைமீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய பேரிடர் மீட்பு குழுவிடம் மக்களை பாதுகாக்க அதிநவீன கருவிகளை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத பகுதிகளில்ஏற்படும் பாதிப்புகளை தங்களிடம் உள்ள அதிநவீன கருவிகளை பயன்படுத்தி பொதுமக்களை பாதிப்பிலிருந்து மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.