கோவில்பட்டி:
முன்னால் பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார், முன்னால் மாநில செயலாளராக இருந்த திலீப் கண்ணன் ஆகியோர், சமீபத்தில், அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து,பின்பு அ.தி.மு.க.,வில் இணைந்தனர். பிறகு இருவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
பின்பு இந்த விவகாரம் பாஜக-அதிமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கோவில்பட்டியில் பாஜக இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவுடன் இணைந்ததை கண்டித்து பாஜகவின் மாநில நிர்வாகிகள் எடப்பாடியின் உருவபொம்மையை எரித்தனர்.
எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்த வழக்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி, மாவட்ட பொருளாளர் பொன்ராஜ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.