திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள். ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக ஒன்றியத்தில் அடங்கிய தடப்பெரும்பாக்கம், சிறுவாக்கம், வன்னிப்பாக்கம்,ஆ ரெட்டிபாளையம், உள்ளிட்ட ஊராட்சிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்.
முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து. தமிழரசன், அவைத்தலைவர் ஈஸ்வரி ராஜா, உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர் இதில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும். பொதுமக்களுக்கு அன்னதானமும்.ஏழை எளியவர்களுக்கு வேட்டி சேலையும் வழங்கப்பட்டன. ஆங்காங்கே நிகழ்ச்சிகள் துவங்கும் போது பிறந்தநாள் கேக் வெட்டி இனிப்புகளும் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களாக பென்சில் .பேனா. நோட்டு புத்தகம். ஜாமென்ட்ரி பாக்ஸ். உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டன. இதில் ராமமூர்த்தி, நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.