தமிழ்நாடு அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நடத்தும் ஒட்டன்சத்திரம் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்.
வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பொருட்டு, தமிழ்நாடு ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
( மகளிர் திட்டம்) மூலமாக வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வேளைவாய்ப்பு முகாமில் வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.
முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ ஐடிஐ மற்றும் கணினி தகுதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகளையுடைய வேலை நாடுனர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தங்களது கல்வி சான்று, ஆதார் அடையாள அட்டை,புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை ஆகியவை சுய விபரக்குறிப்புகளுடன் அவற்றின் நகல்களுடனும் நேரில் வருகை புரிந்து கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.