திண்டுக்கல் மாவட்டம் பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பழனி சண்முக நதியில் இருந்து வரும் பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் புது தாராபுரம் சாலை, காந்தி மார்க்கெட் சாலை, வழியாகத்தான் வரவேண்டும். இதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழனியில் முக்கிய வீதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.
இன்று காந்தி மார்க்கெட் சாலையில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்களின் உத்தரவின் படியும் பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சிவசக்தி அவர்களின் ஆலோசனை படியும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.