சேலம் மாநகர ஆயுதப்படை மைதானத்தில், மாநகர ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் பா.விஜயகுமாரி, இ.கா.ப., அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் ஆயுதப்படை காவலர்களின் பணிகள் குறித்து பாராட்டியும் அறிவுரையும் வழங்கினார். மேலும் சேலம் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தில் இரு பாலர் காவலர்களுக்கான தனித்தனி ஓய்வறைகளை முறையே காவல் உதவி ஆய்வாளர் நிஷா மற்றும் தலைமை காவலர் 256 சங்கர் ஆகியோரை கொண்டு திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும் மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆயுதக் கிடங்கினை பார்வை செய்தார் .
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் ம.மாடசாமி (வடக்கு) அவர்கள், ச.ப.லாவண்யா ( தெற்கு ), அவர்கள் மாநகர ஆயுதப்படை கூடுதல் காவல் துணை ஆணையாளர் ம. ரவிச்சந்திரன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பித்தனர்.