காட்பாடி அருகே பள்ளி கட்டிடம் சீலிங் பெயர்ந்து கீழே கொட்டி வருவதால் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் வேதனை. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு.
வேலூர் மாவட்டம்
காட்பாடி கோரந்தாங்கல் கிராமத்தில் தொடக்கப்பள்ளிஉள்ளது.அந்தப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை குழந்தைகள் படித்து வருகின்றனர்.அந்தப் பள்ளி கட்டிடம் தற்போது மிகவும் சேதம் அடைந்து பள்ளி கட்டிடம் சீலிங் பெயர்ந்து கீழே கொட்டி வருகிறது.மேலும் பெயர்ந்து விழும் சிமெண்ட் பூச்சு பள்ளி குழந்தைகள் மேல் விழும் அபாயத்தில் உள்ளது.
இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்புகார் தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்கவில்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என கூறும் தமிழக அரசு,ஆரம்பப் பள்ளியில் சேதம் அடைந்த கட்டிடங்களை உடனடியாக சரி செய்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எந்த ஒரு அசம்பாவமும் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்