திருவள்ளூர் பிப்.27
அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் 47 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பொன்னேரி எம்எல்ஏ வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் பழங் குடியினருக்கு தனியார் டிரஸ்ட் மூலம் வழங்கிய வீட்டு மனைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா ஊராட்சியின் சுனாமி நகர் பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவில் தலைமை வகித்தார் .ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி. ஜி.கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர். பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன். வட்டாட்சியர் செல்வக்குமார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி. உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அப்பகுதியில் வசித்து வரும் 100 குடும்பங்களை சேர்ந்த 47 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கினர்.
மேலும் ஊராட்சியின் சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் குறித்து வங்கிகளில் தொழில் முனைவோருக்கு வங்கி கடன் வழங்கப்பட்டது. ஊராட்சியின் சொந்த நிதியிலிருந்து முதியவருக்கு ஆடுகளும். இளைஞர்களுக்கு விளையாட்டுத் திறன் மேம்பட உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதில் அருணோத டிரஸ்ட் தலைவர் வர்ஜி மேரி துரைசாமி, ஊராட்சி செயலர் பொற்கொடி. அத்திப்பட்டு ரவி. வார்டு உறுப்பினர் கோமதிநாயகம். அத்திப்பட்டு புருஷோத்தமன்.உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.