ஓமலூரை அடுத்து கொங்கு பட்டி பஞ்சாயத்து அலுவலகம் இடம் மாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் கொங்கு பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை இடம் மாற்றத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு க. விஸ்வநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் கடந்த 35 ஆண்டுகள் பழமையான கொங்கு பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தை, வேறு இடத்தில் புதிதாக கட்டுவதற்கு இடம் அரசு தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே அலுவலகம் உள்ள இடத்தில் அருகில் அலுவலகம் கட்ட தேன்மொழி மற்றும் சாரங்கபாணி என்பவர்கள் தமது சொந்த நிலத்தை தானமாக தருவதற்கு முன் வந்த போதிலும் அதனை ஏற்காமல் ஒரு சில பொருளாதார பின்புலம் கொண்டவர்களின் சுயநலத்திற்காக போக்குவரத்து மற்றும் இன்ன பிற வசதிகள் இல்லாத இடத்திற்கு கட்டுவத அடித்தளம் அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கப்பட்டு மனுவானது காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டது அதனுடைய நகல் பொதுமக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது ஆனால் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவர்களுடைய ரேஷன் கார்டு ,ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பேசும்போது பஞ்சாயத்து அலுவலகம் ஏற்கனவே உள்ள இடத்திலேயே கட்ட வேண்டும் இடம் கம்மியாக உள்ளதால் அருகில் இருப்பவர் இடம் தருவதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் இதை விட்டுவிட்டு அலுவலகத்தை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அடுத்து அமைப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்போது பொதுமக்கள் அங்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர் அருகில் டாஸ்மார்க் இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.
எனவே இதை அரசு எங்களுடைய கோரிக்கையை ஏற்று இருக்கும் இடத்திலேயே பஞ்சாயத்து அலுவலகத்தை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே காடையாம்பட்டி வட்டாட்சியர், தமிழரசி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்தர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் இதை அரசுக்கு பரிசீலனுக்கு அனுப்புவதாகவும் தகவல் தெரிவித்தனர்.