சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்புப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை செயலாளர் அமலாராணி மற்றும் மாவட்ட குழு தலைவர் செல்வன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உத்தரவுப்படி 100 நாட்கள் வேலையும் வேலை நேரம் 4 மணி நேரம் மற்றும் அரசு அறிவித்த கூலியை உத்திரவாதத்துடன் வழங்க வேண்டும்.
மாநில சமூகநலத்துறை ஆணையாளர் அவர்களின் உத்தரவை அமலாக்கி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்க மறுக்கும் அதிகாரி மற்றும் பணிப்பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிக்கு தொகுப்பு வீடு மற்றும் பசுமை வீடு வழங்க வேண்டும்.கிராம சபை கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தனிக்கூட்டம் நடத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிக்கு தனிக்கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி ஏற்ப்படுத்தி தரவேண்டும்.
பணியிடத்தில் அவமரியாதை செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.