கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் மகாஜோதி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற சிறப்பு ஆலோசகர் மேனாள் மாவட்ட நீதிபதியுமான கவிஞர். பாடலாசிரியர் விடியல் குகன் (எ) கு.கருணாநிதி தலைமை தாங்கினார். மதுரை மண்டல இணை இயக்குனர் உள்ளாட்சி நிதி தணிக்கை துறைம.விலங்குராஜா, திண்டுக்கல் திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர், இலக்கியச் செம்மல் சு.மங்கையர்கரசி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் ஜி டி என் கல்வி குழுமத்தின் தலைவர் அரிமா டாக்டர். கல்வித் தந்தை க.ரத்தினம் கலந்து கொண்டு நூல்களை வெளியீட்டு, விழா பேருரை ஆற்றினார். திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் .பா.இரா.கவிதா அரங்க நெறியாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஞானம் தரும் கோதிமரம், ஊடு பயிர், தேன் கவிதை சாரல், ஆசையில் ஒரு கவிதை ஆகிய நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன. மூத்த எழுத்தாளர், சிறுகதை செம்மல் திண்டுக்கல் மா. கமலவேலன் ஞானம் தரும் போதிமரம் என்ற நூலையும், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் முதல்வர் நாவுக்கரசர் முனைவர் இ.ஆர். ரவிச்சந்திரன் தேன் கவிதை சாரல் என்ற நூலையும் ஆகியோர் கலந்து கொண்டு நூல் மதிப்புரை ஆற்றினார்கள்.

திண்டுக்கல் வித்யா பாரதி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் கவிஞர் சு.அரியநாயகம் ஊடு பயிர் என்ற நூலை குறித்தும், வேடசந்தூர் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் வே.முருகேசன் ஆசையில் ஒரு கவிதை என்ற நூலை குறித்தும், திண்டுக்கல் பைந்தமிழ் இலக்கிய பண்பாட்டுக் கழகம் குரல் முரசு கவிஞர். இரா .அசோக்குமார் திருப்பூர் பேச்சாளர் பாடகர் வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பைந்தமிழ் இலக்கிய பண்பாட்டு கழகத்தின் தலைவர் பூ. நாகராஜன், சென்னை தூய்மை பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை ஆணையர் செ.கதிரேசன், திருச்சி கா.ப.துறை துணை இயக்குனர் மருத்துவர் வெ.துரைசாமி, திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.சுப்பிரமணி, திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் பேராசிரியர் முனைவர் மு.பாண்டீஸ்வரன், நிலவை அரசு மகளிர் கலைக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆ.சீனிவாசன், கனரா வங்கியின் மேலாளர் சேதுலிங்கம், வங்கமனூத்து புனித மார்செலின் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் ச.சந்தியாகு, கோயமுத்தூர் தொழிலதிபர்மு.ராசேந்திரன், திண்டுக்கல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மு.செல்வம், திராவிடர் கழகத்தின் மண்டல தலைவர் மு.நாகராஜன், திண்டுக்கல் அன்பு நகை மாளிகை இரா.முருகன், திண்டுக்கல் கதர் துறை உதவி இயக்குனர் சு.முருகேசன், திண்டுக்கல் கூட்டுறவுத்துறை எழுத்தாளர் ச. இரா. குணசேகரன், திண்டுக்கல் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் சுரதா, ஒட்டன்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் சு.குகப்பிரியா, பல்லடம் துணை வட்டாட்சியர் ச.பானுமதி, திண்டுக்கல் தலைமை ஆசிரியை முனைவர் சி.சாந்தா பேபி, திண்டுக்கல் தலைமை ஆசிரியை மு.பஞ்சவர்ணம் ஆகியோர் கலந்து கொண்டு நான்கு நூல்களை பெற்றுக் கொண்டார்கள்.
திண்டுக்கல் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பைந்தமிழ் இலக்கிய பண்பாட்டுக் கழகத்தின் செயலாளருமான நூல் ஆசிரியர் கவிமுகில் பெ.அறிவுடை நம்பி ஏற்புரையாற்றினார்.இவ்விழாவிற்கான ஒருங்கிணைப்புகளை பைந்தமிழ் இலக்கிய பண்பாட்டுக் கழகம், திண்டுக்கல் தமிழக ஆசிரியர் கூட்டணி, திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் ஆசிரியை ச.சுதா நன்றியுரை ஆற்றினார்.