வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் வேலூர் மாவட்ட எல்லையில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான கழிவுகளை கொட்டி எரித்து வருவதாக கூறப்படுகின்றது இதனால் சுற்றுப்புற பகுதியிலுள்ள வீடுகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆறாவதாக கீரை சாத்து கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் அளித்துள்ளனர் இதன் பெயரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் தனியார் தொழிற்சாலை இயங்கும் இடத்திற்கு சென்று நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதில் அனுமதி இன்றி திரவப் பொருட்களை கொட்டி எரிப்பதால் மூச்சு திணறல் மற்றும் நெடி கண்ணெரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுவதாக விஏஓ மற்றும் ஊராட்சி செயலாளர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் இதில் அனுமதி இன்றி தொழிற்சாலை நடைபெற்று வருவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் அளித்துள்ளனர் மேலும் இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் தனியார் தொழிற்சாலை நிறுவனர் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு அனுமதியும் இன்றி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தனியார் தொழிற்சாலை ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னை அடுத்த கீரை சாத்து ஊராட்சியில் அனுமதி இன்றி நடைபெறும் தொழிற்சாலை ஊராட்சி செயலாளர் மற்றும் விஏஓ திவீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புகை மண்டலத்துடன் தனியார் தொழிற்சாலையில் எரிக்கப்படும் திரவ பொருட்கள்