வேலூர் மாவட்டம்
கல்வி ஒன்றே மாணவர்கள் முன்னேற சிறந்த ஆயுதம் வேலூர் மாவட்டம் கல்வியின் தரவரிசையில் தமிழக அளவில் கடைசி இடத்தில் உள்ளது அதனை மாற்ற முன்னேற்றம் காண மாணவர்கள் நன் கு படிக்க வேண்டும் -காட்பாடி நடந்தவிழாவில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஜி.டி, பாபு அவர்களின் கல்வி சேவையினை பாராட்டி அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருக்கு இன்ட்ராக்ட் ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கினார்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வர பிள்ளை அவர்களின் தலைமையில் விழாவானது நடைபெற்றது இவ் விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் வேலூர் மாநகராட்சியின் ஒன்றாவது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜ் அவர்களும் வேலூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் அன்பு அவர்களும் கலந்து கொண்டு பரிசினை வழங்கினார் இவ்விழாவில் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சச்சிதானந்தம் ராஜா உள்ளிட்டோரும் திரளான மாணவர்களும் பங்கேற்றனர்
செங்குன்றம் அருகே.சிவன் கோவில் சிவராத்திரி திருவிழா இரு தரப்பினரிடையே மோதல்
இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசுகையில் காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் படிப்படியாக ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம் மேலும் கல்வி ஒன்றே நீங்கள் வளர்ச்சி அடைய சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்து முன்னேற்றம் காண வேண்டும் இம்மாவட்டம் கலை விழா போட்டிகளில் 3 ஆவது இடத்தை பிடித்தது பெருமை சேர்க்கிறது ஆனால் வேலூர் மாவட்டம் கல்வியில் பின் தங்கி தமிழகத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது அதனை முன்னேற்ற அனைவரும் நல்ல படியாக படித்து வேலூர் மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமென பேசினார்