திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அனந்தேரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாலம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று 48-வது நாள் மண்டல பூர்த்தி பூஜை மற்றும் சங்காபிஷேக விழா காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த மண்டல பூர்த்தி பூஜை மற்றும் சங்காபிஷேக விழாவிற்கு பூண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
கோட்டபட்டியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவன் சார்பாக மக்காச்சோள படைப்பழு மேலாண்மை பற்றி பயிற்சி
சாமி தரிசனம்
இதில் கலச பூஜை உள்ளிட்ட ஏராளமான பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பூண்டி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஜான் என்கின்ற எம்.பொன்னுசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.