செங்குன்றம் அருகே.சிவன் கோவில் சிவராத்திரி திருவிழா இரு தரப்பினரிடையே மோதல். பொன்னேரி வட்டாட்சியர் சமரசம்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே அலமாதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தாய் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ தந்தை அலர்மதீஸ்வரர் ஆலயம்இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி முன்னிட்டு மகோத்சவ விசேஷ ஆறு கால பூஜையும்,கலசாபிஷேகமும்,ஸ்ரீ தாய் காமதேனு பாலபிஷேக பெருவிழாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான 54 ஆம் ஆண்டுகான மகா சிவராத்திரியை முன்னிட்டு நிகழ்ச்சிக்கான விழா குழு குறித்த சமரச கூட்டம் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் மதிமுக நிர்வாகியும்,ஒன்றிய கவுன்சிலருமான கர்ணன் முன்னிலையில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.நிகழ்ச்சி நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அப்பகுதியில் நிர்வாகிகளிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கலைந்து ஆலோசிக்கப்பட்டு சிக்கலை பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் தீர்க்கப்பட்டது.இதில் அலமாதி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.