ரோல் பால் ஸ்கேட்டிங் ஆறாவது உலகக் கோப்பை விளையாட்டு போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஏப்ரல் 21/04/2023 ம் தேதி முதல் 26/04/2023ம் தேதி வரை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கத்தை சேர்ந்த மாஸ்டர் பிரேம்குமார் தலைமையில் சென்ற மாணவர் டி. பிரதீப் இந்தியாவின் ஆண்கள் அணி சார்பிலும் மற்றும் இந்தியாவின் பெண்கள் அணி சார்பில் ஒட்டன்சத்திரம் (TUJ) தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க தோழர் சந்திரகாந்தா ரிப்போர்ட்டர் அவர்கள் அன்பு மகள் மாணவி எஸ் எஸ். சுஷ்மிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் ஆண்கள் பிரிவு 2ம் இடமும், இந்தியவின் பெண்கள் பிரிவு 3ம் இடமும் பெற்று வெற்றி பெற்றது. இதனால் நமது இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட செய்தியாளர் :
ச. நிர்மல்குமார்.