பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் சர்வதேச சிறுதானிய விழா விலங்கியல் துறை மற்றும் தாவரவியல் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் எமது கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு வரகு, தினை, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி ஆகிய சிறுதானியங்களை கொண்டு கண்காட்சி மற்றும் அதன் பயன்களையும் விளக்கினார்கள்.
சிறுதானியங்களை கொண்டு பல்வேறு வகையான உணவுகளை தயாரித்து காட்சி படுத்தினார்கள். இதில் சிறுதானியங்களை கொண்டு உணவுகளை தயாரித்த மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் பரிசாக வேதியியல் துறை மூன்றாமாண்டு. மாணவர்கள் ஆர். மகேந்திரன் என். செந்தில்குமார், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசை விலங்கியல் துறை முதுகலை மாணவர்களுக்கு முறையே எஸ். ரேணுகதேவி ஆர். ஹேமலதா மற்றும் சி. பிரகாஷ், பி. சசிக்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ப. பிரபாகர், வேதியியல் துறை தலைவர் முனைவர் துரைமாணிக்கம், தழிழ்துறை தலைவர் முனைவர் க. கிருஷ்ணமூர்த்தி, மு. சேதுராமலிங்கம் வரலாற்றுதுறை மற்றும் அனைத்துத்துறை பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இவ்விழாவை ஒருங்கிணைப்பாளர் ந. பரமேஸ்வரி விலங்கியல் துறை மற்றும் உறுப்பினர்கள் முனைவர் கோ. மயிலாத்தாள் முனைவர் இரா. வ. கலைமதி அ. அமுதா (விலங்கியல் துறை) எம். விக்னேஷ்வரன் (தாவரவியல் துறை) ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர