கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அந்தந்த பகுதியில் உள்ள நிருபர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரையும் நேரில் அழைத்து அவர்களின் கோரிக்கையை மனுவாக வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார்.
மேலும், உடனடியாக ஒரு மாதத்திற்குள் மனுக்கள் மீது பரிசீலனை எடுக்கப்பட்டு அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ க்கு ரிஷிவந்தியம், திருக்கோவிலூர் மற்றும் சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடக நிருபர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.