வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கான இலவச கண்சிகிச்சை முகாம் வேலூர் காவலர் மண்டபத்தில் நடந்தது. முகாமை மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்து கண்பரிசோதனை செய்து கொண்டார்.இந்த கண் சிகிச்சை முகாமை வாசன் ஐ கேர் மருத்துவமனை டாக்டர் பரூக் அஹமத் மேலாளர் ஜோஸ்வா ,மற்றும் மருத்துவ குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கண் பரிசோதனை ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது
தொடர்ந்து, காவல் துறையில் பணி புரியும் ‘டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், காவலர்கள், போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை
போலீசார் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர்.
இதில், டிஎஸ்பி திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்துகொண்டனர் .