திண்டுக்கல் தாடிக்கொம்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிழக்கு மாவட்ட சார்பில் 12 -ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு தி.வேல்முருகன் வேண்டுகோளுக்கிணங்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நமக்கான வேலை வாய்ப்பு எங்கே? யார் அபகரிப்பது? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு சந்தப்பேட்டை அருகே நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் க.ரூபன்சுந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மாவட்ட பொருளாளர் அ.பிலிப்தாஸ் , ஆத்தூர் ஒன்றிய தலைவர்
சூ.வேளாங்கண்ணி , திண்டுக்கல் மாவட்ட ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பா.இப்ராகிம்கான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நிகழ்ச்சியின் மாநில வழக்கறிஞர் அணி பி.விவேக்யூஜின் குமார் வரவேற்புரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 12-ஆம் ஆண்டு துவக்க விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திருப்பூர்.சுடலை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென்மண்டல பொறுப்பாளரும், மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளருமான வடலூர் சோதி. குமரவேல், தலைமை நிலைய பேச்சாளர் மதுரை மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட மகளிர் அணி கிழக்கு மாவட்ட தலைவர் பூமாதேவி, மாவட்டச் செயலாளர் சேசுமேரிசெபஸ்தியம்மாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார், ஆத்தூர் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், சின்னாளப்பட்டி பேரூராட்சி செயலாளர் ஆரோக்கியசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட, மாநகர,ஒன்றிய, கிளை, இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சு.பாலமுருகன் நன்றி கூறினார்.