கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஏடிஎம்மிஷின் பண மோசடியில் ரூபாய் 1,15,54,500 கையாடல் செய்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கைது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் சங்கராபுரம் காவல்துறையும் அதிரடி நடவடிக்கை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் இன் துணைத் தலைவர் ஜேம்ஸ் பிலிப்ஸ் என்பவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார் அதில் ஹிட்டாச்சி நிறுவனத்தின் மூலம் ஏடிஎம் மெஷின் சங்கராபுரம் நகரில் உள்ள வில்லேஜ் பஜார் நிறுவனத்தில் சங்கராபுரத்தைச் சேர்ந்தவிஜயகுமார் மனைவி பிரியங்கா என்பருடன் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நிறுவப்பட்டது அந்த ஏடிஎம் மிஷின் பணத்தின் கையிருப்பு பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பானது பிரியங்கா இடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்பதில் பிரியங்கா அதன் அடிப்படையில் ஏடிஎம் மிஷினில் எவ்வளவு பணம் தேவையோ அப்பணத்தை ஹிட்டாச்சி நிறுவனத்தின் மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து சங்கராபுரம் ஐசிசி வங்கிக்கு வந்து சேரும்.
அப்பானம் முழுவதும் ஹிட்டாச்சி நிறுவனத்துக்கு சொந்தமாகும் ஹிட்டாச்சி ஏடிஎம் நிறுவனம் சொல்லும் பணத்தை சங்கராபுரம் ஐசிஐசிவங்கி கிளையில் இருந்த பணமாக எடுக்க பிரியங்கா செல்போனில் ரகசிய குறியீடு எண் வரும்அந்த ரகசிய குறியீட்டு என்னை வங்கியில் காண்பித்து பணத்தைப் பெற்று பணத்தை முகவர் என்ற பெயரில்ஏடிஎம் மிஷினில் ஒயிட் கார்டுமூலம் செலுத்தி இருப்பு வைக்க வேண்டும் இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஏடிஎம் மிஷனில் இயந்திரக் கோளாறு அதனால் தவறுதலாக ரகசிய கூறிவிட்டு என்னானது தொடர்ந்து பிரியங்காவிற்கு வந்தபடி வந்து கொண்டிருந்ததால் பிரியங்கா என்பவர் பேராசை கொண்டு பணத்தை எடுத்து தனது சொந்த வங்கி கணக்கில் செலுத்திக்கொண்டார்.
இது குறித்து அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் கூறப்பட்டிருந்தது இது குறித்து பிரியங்காவை சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளர்பாண்டியன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை வரவழைத்து விசாரணை நடத்தியதில் அவர் பணம் எடுத்து தன் சொந்த வங்கி கணக்கில் இதுகுறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் விஜயகுமார் மனைவி பிரியங்கா தனது சொந்த வங்கி கணக்கில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் சங்கராபுரம் வில்லேஜ் பஜார் உரிமையாளர் விஜயகுமார் மனைவி பிரியங்கா மற்றும் கணவர் விஜயகுமார் மற்றும் சிவக்குமார், தன்ராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து பிரியங்கா என்பவரை கைது செய்தனர் மேலும் தலைமறைவாக உள்ள மூன்று நபர்களை சங்கராபுரம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர் ஹிட்டாச்சி ஏடிஎம் மிஷின் பணப்பரிமாற்ற நிறுவனத்தில் பணத்தை 1கோடியே15 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.