திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பொருளூர் ஊராட்சியில் திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருட்கள் துறை அமைச்சருமான பசுமை நாயகர் அர.சக்கரபாணி ஆலோசனையின் படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக துணைச்செயலாளர் சி.இராஜாமணி அவர்களின் தலைமையில் கழக இரு வண்ண கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தொப்பம்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் இ.பிரபாகரன், ஊராட்சி மன்றத் தலைவர் பரமேஸ்வரி சக்திவேல், துணைத்தலைவர் வளர்மதி செல்லமுத்து, வார்டு உறுப்பினர் சவுடம்மாள், கிளைக் கழக செயலாளர்கள் சுப்பிரமணி, செல்வராஜ், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.