அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக பாஜக அரசை கண்டித்து பொன்னேரி வட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோன்று மீஞ்சூரில் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மற்றும் பதினைந்தாவது வார்டு கவுன்சிலர் பரிமளம் அருண்குமார் உள்ளிட்டவர்களின் தலைமையில் பஜார் பகுதியில் நடைபெற்றது. தொடர்ச்சியாக அத்திப்பட்டு பகுதியில் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு ஜி. புருஷோத்தமன் தலைமையில் அத்திப்பட்டு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இதில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் முழங்கப்பட்டன. இதில் நந்தகுமார்.சக்கரவர்த்தி. கந்தசாமி.
புண்ணியகோட்டி. நந்தன். துரை ஜெயக்குமார். நித்யானந்தம்.அல்லி முத்து. இளையராஜா. செல்வகுமார்.விஜய். சிவக்குமார். அன்பரசு. ஆப்டிகல்ஸ் ராஜா. முகமது தாரிக்.உள்ளிட்ட திரளான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.