வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் மக்கள் சந்திப்பு அரசு ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் ஜார்ஜ் லோகன் தாஸ் உட்பட்ட தலைவர்கள் காட்பாடி தலைமையில் மற்றும் வரவேற்புரை சுரேஷ் மார்க்கண்டேயன் உட்கோட்ட செயலாளர் காட்பாடி பொருளாளர் சிட்டிபாபு ரவி முன்னுரையில் மாவட்டத் தலைவர் குமரவேல் , மாவட்டச் செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் விளக்க உரை உரையாற்றினார்கள் மாவட்ட துணை செயலாளர் வேலாயுதம் குமரவேல் கோபி கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பெருமாள் சிறப்புரையாற்றினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில்
41 மாத பணிநீக்க காலந்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்,இறந்த சாலைப்பணியாளர்கள் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும். தர ஊதியம் 1900 ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியமளாக அறிவித்திட வேண்டும்
7500 க்கும் மேற்பட்ட சலலைப்பணியாளர் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழக்கிட வேண்டும்,
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசியியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திட வேண்டும், அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு சமேளங்கள் வழங்கிட வேண்டும்,அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை கட்டாயமாக்கி அனைத்து நிறுவனங்களின் பெயர்பலகைகளில் நிறுவனப்பெயர், ஊர் பெயர் தமிழில் பெரிதாக எழுதிட வேண்டும்,சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, பொது அமைதி பாதுகாப்பு, போராட்டம் என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் சில அமைப்புகளால் மீறப்படுவதை இனியும் அனுமதிக்காமல் காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும்.,துரைரீதியிலான நடவடிக்கைக்கு காவல்துறை பரிந்துறைத்திட வேண்டும்,
பொங்கள் போனஸ் ரூ.10,000/- வழங்கிட வேண்டும். கோரிக்கைகள் முன்னிறுத்தி கோஷமும் முழுக்கமும் விட்டு பிரச்சார ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.