வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் 12 அம்சா கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலுவிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள்
தங்கள் கோரிக்கைகளான 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்காளுக்கு வாரிசு வேலை பணி வழங்கிட வேண்டும். தரஊதியம் 1900 ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு பணியாளராக அறிவித்திட, 7500-க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர்கள் காலி இடங்களை நிைைஞகளுக்கு வேலை வழங்கிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி நிலுவை, சரண்விடுப்பு சம்பளங்கள் வழங்கிட வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10,000- ம் வழங்கிட வேண்டும்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2021 ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்கி அவர்களது குடும்பங்களை பாதுகாத்திட வேண்டும்! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! என்பதை கட்டாயமாக்கி சிறு, பெரு வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் நிறுவன பெயர் ஊர்பெயர் தமிழில் பெரிதாக எழுதிட வேண்டும்!
வேலூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை தூக்கிட்டு கொன்றுவிட்டு அதே சேலையில் தாய் தற்கொலை
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, பொது அமைதி பாதுகாப்புகளை கேள்விக்குறியாக்கும்’ போராட்டம் என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலங்களில் 13 ஆண்டுகளாக சில அமைப்புகளால் அத்துமீறப்படுவது தொடர்கிறது. இனியும் அதை அனுமதிக்காமல் காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும்! துறை ரீதியிலான
நடவடிக்கைக்கு காவல் துறை பரிந்துரைத்திட வேண்டும்.
அரசு ஊழியர் ஓய்வு வயதை 58-ஆக குறைத்து காலி பணியிடங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும். 50-க்கும் மேற்ப்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்திட வேண்டும் என 12 கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.