சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் எம் எல் ஏ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தமிழகத்தில்10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் சிறைவாசிகளை தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது போல் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை நடத்த இருக்கிறது என்று கூறினார்.
பீகார் மாநில முதலமைச்சர் அவருடைய சொந்த நிதியில் ஒன்றிய அரசு எதிர்பார்க்காமல் சாதி வாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறார் என்பது போல் தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.கடந்த காலத்தில் கடந்த முதல்வர்கள் கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சமூகநீதி காத்து வந்தார் எம்ஜிஆர் அவர்கள் வன்னியருக்கு இட ஒதுக்கிடை வழங்கி முடிவெடுத்து வந்தார்.
இதேபோல் தற்போது உள்ள தமிழக முதல்வர் அதேபோல் நடந்து சமூகநீதி வழிநடத்த சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று ஏற்கனவே வேலூர் ஆற்காட்டிலும் தர்மபுரியிலும் சாதி வரி கணக்கெடுப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது இதேபோல் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது போல் சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்.
ஏற்கனவே மாணவ செல்வங்களுக்காக இதுபோன்ற கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் கூறி வந்தேன் 10.5% இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வந்தோம் சாதிவாரி கணக்கெடுப்பை இதுவரையிலும் செயல்படுத்தவில்லை என்றும் எந்தெந்த சமூகம் எவ்வளவு எண்ணிக்கையில் இருந்தாலும் இதை ஒதுக்கீட்டை வழங்கிய சமூக நீதியை காக்க கலைஞர் வழியை தமிழக முதல்வர் தளபதி வழி செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்று கூறி விடுகிறார்.
ஒருவேளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை நோக்கி வெளியே போராட்டம் நடத்தப்படுமென தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக வேல்முருகன் கூறி வருகிறார். வடநாட்டவர்களுக்கு இந்த முதலீட்டாளர்கள் ஆக சேலத்தில் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதி ஏற்றுமதி அவர்கள் கைக்கு மாறிவிட்டது எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கோர்ஸ் ஒட்டுமொத்தமாக வடநாட்டுவதற்கு கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது வைரம் ஏற்றுமதி இறக்குமதி என்னுடைய பகுதியில் உள்ள முந்திரி போன்றவற்றை அனைத்தும் வடநாட்டுவருக்கு தீர்மானிக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும் வணிகத்துறை கொஞ்சம் கொஞ்சமாக வடவர்களுக்கு சென்று விடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் அனைத்தும் மால்கள் போன்ற சென்னையில் இருக்கும் எந்த கட்டிடங்களாக இருந்தாலும் ஒன்று கூட தமிழர்கள் இல்லை என்று தாங்கள் ஆய்வு செய்து இருப்பதாக கூறினார்.
தேசிய இனங்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி எதிரி அல்ல இந்த மண்ணில் வேலைவாய்ப்பு உரிமைகளை பறித்து வருகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் பக்க குடிமகனாக பயன்படுத்தி வருகிறார்களோ அது போல் அங்கு தமிழ் அழிக்கப்பட்டு சிங்கள மொழி பெயர் பார்க்கப்பட்டது இதே போல் அனைத்து கல்விகளிலும் நீட் நெட்டு என்று பல்வேறு தேர்வுகளை கொண்டு வந்து ஒன்றிய அரசு இயக்கி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் உதாரணத்திற்கு பத்தாயிரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 50% எடுத்துக் கொள்கிறார் என்றும் இலங்கை போல் செயல்பட்டு வருகிறது என்றும் கண்டிப்பாக கூறினார்.
பெரம்பூரில் எழுத்துத் தேர்வுக்கு நடத்தப்பட்ட வட மாநிலத்தவரை எதிர்த்து போராடி தமிழர்களுக்கு சொந்த மண்ணில் ரயில்வேவில் வேலை தர வேண்டும் என்று கூறி வருகிறார் அஞ்சல் துறையிலும் போராடினோம் அதேபோல் கடிதத்தை எழுதி அனுப்பினோம் ஆனால் வேலை தருவதை பற்றி யோசித்து வருகிறோம் என்று கூறி வருகிறார் எல்லா அரசுத்துறை பொதுத்துறை வங்கிகளிலும் தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என்று கூறுனார்.
விமான நிலையத்தில் தமிழர்கள் செல்வதற்கு தமிழ் எந்த ஒரு விளம்பர பலகையும் இல்லை இலங்கை போல் தமிழர்களை பின்னுக்கு தள்ளுவது போல் ஒரு அபாயம் உள்ளது என்று கூறி வருகிறார் ஒரே நாடு ஒரே தேசம் என்ற தலைப்பில் வட மாநிலத்தவரை ரேஷன் கார்டு ரேஷன் அட்டை போன்றவற்றை ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு பின்பற்ற இன்றைய அரசு செயல்பட்டு வருவது தமிழர்களை குறிவைத்து செயல்படுவதாக வணிகம் பறிபோகுது வேலைவாய்ப்பு பறிபோகிறது இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எங்களுடைய நிலத்தை எங்களுடைய மின்சாரத்தை பன்னாட்டு பன்னாட்டவர்கள் பயன்படுத்துவது சிறந்த தக்கது வடநாட்டவர்களை எதற்காக இங்கு வருகிறார்கள் கற்பழிப்பு குற்றவாளியா என்பதை தமிழக அரசு கண்டு ஆராய்ந்து முடிவெடுத்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அந்தந்த மாநிலத்தில் அவர் அவர்களுக்கு ஒன்றிய அரசு தனியார் துறைகளோ பொதுத்துறைகளிலோ கொடுப்பது போல் தமிழகத்திலும் ஒன்றிய அரசு கொடுங்கள் என்றும் எல்லா வளங்களும் இருக்கின்ற தமிழர்களை கொள்ளை அடிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வருகிறார் என்று கூறியிருக்கிறார். ஒன்றிய அரசு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதால் உடனே திரும்ப பெற வேண்டும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் வடமாநிலத்தவர் ஒரு சில பேர் வன்முறையில் ஈடுபடுகிறார் அவர்கள் அங்கு அப்படித்தான் செயல்படுகிறார் அதனால் தான் இங்கு செயல்படுகிறார்கள் தப்பி செல்கிறார்கள் எங்கள் வாகனத்தில் இது சகஜம் என்று காவல்துறை விசாரணையில் கூறுகின்றனர் என வேல்முருகன் கூறினார்.
எச்.ராஜா தமிழனுக்கு ஆண்மை கிடையாதுடா என்று கூறுகிறார் அவரே சர்மா காரர் கேட்டால் வேல்முருகன் தமிழுக்காக தமிழனுக்காக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று கூறி வருகிறார் பாரதிய ஜனதாவை சேர்ந்த எச். ராஜா கைது செய்யப்பட வேண்டும் எஸ்வி சேகர் போன்றவர்கள் ஆபாசமாக பேசுவதை கண்டித்து வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
வேங்கை வயல் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்ததையொட்டி போராட்டம் நடத்தி இதை தமிழக போலீசார் சிபிசிஐடி குற்றவாளி கண்டுபிடிப்போம் என்று கூறுகிறார்கள் நாங்கள் எங்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் சென்று நடத்திய போது போலீசார் எங்கள் மீது கொதித்து எழுகிறார்கள். சேலம் மாவட்ட கலெக்டர் முதற்கொண்டு தமிழகத்தில் சில மாவட்ட கலெக்டர் வட மாநில இனத்தவர்களுக்கு கேக் ஊட்டுகிறார்கள். ஆனால் தமிழர்களுக்கு கேக் ஊட்டினார்களா என்ற கேள்வி முன்வைத்து பேசி வருகிறார்.
ஆளும் திமுக அரசு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று திமுக வாய்மொழியால் பேசக்கூடாது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு
சுங்கச்சாவடிகளை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டும் தான் போராடி வருகிறது.
எங்கள் மீது தான் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் போடுகிறார்கள் ஆகவே நாங்கள் சுங்கச்சாவடியை அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டிக்கின்றோம் சேலம் மாவட்டத்தில் கூட இரண்டு சுங்கச்சாவடிகள் உள்ளது அதை ஒரு சுங்கச்சாவடியை எடுக்கும் வரை போராடுவோம் என்று கூறினார்.
ஓமலூர் சேவியர்,