சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியபுரம் மேல் ஒட்டத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள்
ரூபாதேவி (வயது 22).இவருக்கு திருமணம் ஆகவில்லை இவர் பிஎஸ்சி படித்து முடித்துவிட்டு ரேஸ் கோச்சிங் சென்டர் ஐந்து ரோடு சேலத்தில் படித்து வருகிறார்.
இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் 24/3/2023 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அவரது வீட்டில் மின்விசிறி யில் துப்பட்டாவால் தூக்கிட்டு கொண்டார் பிறகு அருகில் இருந்தவர்கள் பார்த்து ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,அங்கு வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக ஓமலூர் காவல் ஆய்வாளர் செல்வராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.